FIFA 2022 உலகக்கோப்பை: மாஸ் காட்டும் கத்தார்…இன்னும் இரண்டே வருடங்களில்.!

2022 FIFA World Cup
Pic: Qatar Airways

கத்தார் நாட்டில் சரியாக இன்னும் இரண்டு வருடங்களில் 2022ஆம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி நடைபெற உள்ளது.

கால்பந்து உலகக் கோப்பையை நடத்தும் முதல் அரபு நாடு என்ற பெருமையை கத்தார் பெற்றுள்ளது.

கத்தாரில் 2022 FIFA உலகக் கோப்பை போட்டி நடைபெறும் என FIFA 2010 டிசம்பரில் அறிவித்தது. தோஹாவை சுற்றியுள்ள 8 மைதானங்களில் உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது.

கத்தார் அமீர், அமெரிக்க மாநில செயலாளருடன் சந்திப்பு..!

இதுவரை கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகளை நடத்திய நாடுகளிலேயே மிகச்சிறிய நாடு என்றால் அது கத்தார் தான். இதற்கு முன்னர், கத்தார் நாட்டை விட மூன்று மடங்கு பெரிய நாடான ஸ்விட்சர்லாந்தில் 1954ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது.

FIFA அமைப்பின் தலைவர் கியானி இன்ஃபாண்டினோ அவர்கள் கூறுகையில், கத்தார் 2022 உலகக் கோப்பை போட்டிகளை நடத்த எந்தளவுக்குத் தயாராகி வருகிறது என்பதை நேரில் காண தோஹாவுக்கு சமீபத்தில் சென்றேன்.

நிச்சயம் ரசிகர்களுக்குப் புதுவித அனுபவம் கிடைக்கும் என்றும், மிகச்சிறந்த உலகக் கோப்பையைக் காணும் வாய்ப்பை கத்தார் உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.

கத்தாரில் கோவிட்-19 இரண்டாம் அலை வருமா..? MoPH விளக்கம்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…