கத்தாரில் தொழிலாளர்களுக்கு ஆட்சேர்ப்பு ஒப்புதல் வழங்கும் பணி தொடக்கம்.!

ADSLA resume recruitment requests
Pic: Twitter/Qatar News

கத்தாரில் கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தொழிலாளர் ஆட்சேர்ப்பு ஒப்புதல் வழங்கும் பணி வருகின்ற நவம்பர் 15 முதல் மீண்டும் தொடங்க உள்ளதாக நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சகம் (ADSLA) அறிவித்துள்ளது.

நிறுவனங்களிடம் இருந்து ஆட்சேர்ப்பு கோரிக்கைப் பெரும் முறை மீண்டும் தொடங்கப்படும் என்று அமைச்சகம் அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

கத்தார் அல் ஷாஹானியா பூங்காவில் பறவைகளுக்கு நீர் தொட்டிகள் அமைப்பு.!

தொழிலாளர்களுக்கு ஒழுக்கமான வீட்டுவசதி மற்றும் ஆண்டு வருமானம் வழங்குவது போன்ற ஒவ்வொரு கோரிக்கையும் ஆய்வு செய்யப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கத்தார் பயண மற்றும் வருவாய் கொள்கையின்படி புதிய ஆட்களின் நுழைவு தொடரும் என்று அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், நிறுவனங்களின் உண்மையான தேவையை பொறுத்து ஆட்சேர்ப்பு ஒப்புதல்களை அமைச்சகம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 5 பேர் கைது‌.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…