கத்தாரில் கோலாகலமாக தொடங்கும் அல் கோர் கார்னிவல் திருவிழா.!

Al Khor Carnival 2021
Pic: Al Khor Carnival

கத்தார் அல் கோர் பகுதியில் அமைந்துள்ள Al Bayt Stadium பூங்காவில் அல் கோர் கார்னிவல் (Al Khor Carnival) திருவிழா இந்த வார இறுதியில் தொடங்க உள்ளது.

இந்த திருவிழா வருகின்ற ஜனவரி 21ம் தேதி முதல் பிப்ரவரி 7ம் தேதி வரை மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் களைகட்டும் 12வது சர்வதேச Falconry மற்றும் Hunting விழா.!

இந்த திருவிழாவில், வேடிக்கை சவாரிகள் (fun rides) கலாச்சார நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திறக்கப்பட்ட Al Bayt பூங்காவில் 30க்கும் மேற்பட்ட கால்பந்து ஆடுகளங்களுக்கு சமமான பசுமையான பூங்காவாக அமைந்துள்ளது.

மரங்கள் நிறைந்த பாதசாரி நடைபாதைகள், ஏரிகள் மற்றும் பிற நீர் அம்சங்கள் மற்றும் பெரிய விளையாட்டு பகுதிகள் போன்றவை இந்த பூங்காவில் இடம்பெற்றுள்ளது.

கத்தாரில் வாகன தொழில்நுட்ப சோதனையை மேற்கொள்ள தற்காலிக நிலையம் அமைப்பு.!

Pic: Al Khor Carnival