பிரெஞ்ச் பொருட்கள் விற்பனை நிறுத்தம் – அல் மீரா நிறுவனம் அறிவிப்பு.!

AlMeera withdraws French products
Pic: iloveqatar.net

கத்தாரில் உள்ள அல் மீரா நுகர்வோர் பொருட்கள் நிறுவனம் தனது அனைத்து கிளைகளிலிருந்தும் பிரெஞ்சு தயாரிப்புகளை (French products) மறு அறிவிப்பு வரும் வரை திரும்பப் பெறத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

அல் மீரா நிறுவனம் தயாரிப்புகள் குறித்த மக்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்கையில், சிறப்பை அடைய எப்போதும் எங்களுக்கு வழிகாட்டும் உங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 5 பேர் கைது‌.!

மேலும், அல் மீரா ஒரு தேசிய நிறுவனமாக எங்கள் மத விதிமுறைகள், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின்படி, நம் நாட்டிற்கு சேவை செய்யும் வகையில் செயல்படுகிறது என்பதை நாங்கள் உங்களுக்கு உறுதிப்படுத்த விரும்புகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…