கத்தாரில் அடுத்த ஆண்டு அக்டோபரில் முதல் பொதுத்தேர்தல்; அமீர் அதிரடி அறிவிப்பு.!

Amir announces Shura Council elections
Pic: QNA

கத்தார் அமீருக்கு வழிகாட்டும் ஷூரா சபையின் உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் 49வது ஷூரா சபையில் அறிவித்துள்ளார்.

கத்தாரில் அமீராக பொறுப்பேற்றுள்ளவருக்கு வழிகாட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஷூரா சபை என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது.

கத்தார் அரசுக்கு அறிவுரை வழங்கும் உச்சபட்ச அதிகாரம் பெற்ற ஆலோசனைக் குழுவான ஷூரா சபையின் உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க கத்தார் அமீர் ஷேக் தமீம் உத்தரவிட்டுள்ளார்.

கத்தார் இராணுவ போலீஸ் படைகளின் கட்டளை முகாம் தொடக்க விழா; அமீர் பங்கேற்பு.!

கத்தாரில் 2004ஆம் ஆண்டிலிருந்தே இந்த தேர்தல் ஒத்திவக்கப்பட்டு, ஷூரா சபை உறுப்பினர்களைத் அமீர் மூலம் தேர்வு செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த முறை பொதுத் தேர்தலின் மூலம் மக்கள் 30 ஷூரா சபை உறுப்பினர்களை தேர்வு செய்வார்கள்.

அதில் 15 பேர் ஷூரா சபையின் உறுப்பினர்களாக மன்னரால் நியமிக்கப்படுவார் என்றும் கத்தார் அமீர் அறிவித்துள்ளார்.

மேலும், இந்த தேர்தலை நடத்த கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு, அந்த கமிட்டியின் தலைவராக பிரதமார் இருப்பார் என்றும், 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த தேர்தல்கள் நடைபெறும் என்றும் அமீர் அறிவித்துள்ளார்.

கார்களில் நான்கு பேர் மட்டுமே செல்ல அனுமதி – உள்துறை அமைச்சகம்.!

Pic: QNA

கத்தாரில் கடந்த செவ்வாய்க்கிழமை (03-11-2020) அன்று நடைபெற்ற 49வது ஷூரா சபையை தொடங்கி வைத்து பேசிய அமீர், கத்தாரை வழிநடத்தும் ஷூரா சபையை வலுப்படுத்த தேர்தல் ஒரு முக்கியமான அம்சம் என்றார். மேலும், மக்களின் பங்களிப்பின் மூலம் சட்டமன்ற நடைமுறைகளை இன்னும் வலுப்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.

மேலும், நமது அரசியலமைப்பு முறை இந்த சமூகத்தின் அமைப்பில் இருந்து கட்டப்பட்டுள்ளது. இங்கு பல கட்சிகளைக் கொண்ட அமைப்பு இல்லை என்றாலும் நேர்மையான மற்றும் முற்போக்கான எமிரெட்ஸ் முறையே பாராம்பர்யமாக இங்கு இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

கத்தாரில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்தல் பற்றிய மற்ற விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

Amir announces Shura Council elections
Pic: QNA

கத்தாரில் 2013ஆம் ஆண்டு முதல் அமீராக உள்ள ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் ஜனநாயகத்தன்மை, தொழிலாளர் உரிமை மற்றும் பெண்கள் பிரதிநிதித்துவம் என பல தளங்களில் மாற்றங்களை முன்னெடுத்துள்ளார்.

கத்தார் அமீர் அவர்கள் 49வது ஷூரா சபையில் ஆற்றிய உரை:

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…