துருக்கி சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கத்தார் அரசு உதவ தயார்..!

Amir sends condolences Turkey
Pic: Qatar Day

துருக்கி நாட்டின் ஈஜியான் கடலோர பகுதியிலும், கிரீஸின் சேமோஸ் தீவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல வீடுகள் சேதம் அடைந்து ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

துருக்கியின் இஸ்மிர் மாகாணத்தை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம் 7.0 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸைத் தொடர்ந்து சவுதியிலும் தாக்குதல் – கத்தார் கடும் கண்டனம்.!

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 419 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் நேற்று (30-10-2020) துருக்கி அதிபர் தாயூப் எர்டோகன் அவர்களுடன் தொலைபேசி மூலம் உரையாடினார்.

இந்த உரையாடலில், கத்தார் அமீர் அவர்கள் துருக்கி நாட்டின் இஸ்மிர் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது  இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் நாட்டிற்கு கத்தார் தூதரகம் மருத்துவ உதவிகள் வழங்கல்.!

மேலும், துருக்கியின் இஸ்மிர் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்புகளை தணிக்க கத்தார் அரசு உதவ தயாராக உள்ளது என்றும் துருக்கி அதிபரிடம் கூறியுள்ளார்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…