கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 3 பேர் கைது‌.!

Authorities arrest three people

கத்தாரில், வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதற்காக‌ 3 நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக கத்தார் செய்தி நிறுவனம் நேற்று (09-11-2020) ட்வீட் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் (COVID-19) மக்களிடையே பரவுவதை கட்டுப்படுத்த கத்தார் முயற்சித்து வரும் வேளையில், அரசாங்கத்தின் உத்தரவுகளை சிலர் மீறி, பொது சுகாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என்பதாக கூறப்பட்டுள்ளது.

கத்தாரில் இந்த வாரம் ஈரப்பதமான வானிலை நிலவும்; வானிலை ஆய்வுத்துறை.!

கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அனைவரும் தங்கள் பாதுகாப்பு மற்றும் பிறரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைச்சகம் குறிப்பிட்டுள்ள விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு  அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர்கள்:

  1. Benjamin Aggler
  2. Prasanth Sabithi
  3. Youssef Jaber Jaberi

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…