ஏடன் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்: கத்தார் கடும் கண்டனம்.!

Bomb explosion aden airport
Pic: (Fawaz Salman/Reuters)

ஏமன் நாட்டில் உள்ள ஏடன் விமான நிலையத்தில் நேற்று (30-12-2020) புதன்கிழமை ஏற்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு கத்தார் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியா, கத்தார் இடையே சிறப்பு விமான சேவைகள் ஜனவரி 31, 2021 வரை நீட்டிப்பு.!

இந்த தாக்குதலில், 26 பேர் பலியான நிலையில், 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை நிராகரிப்பதில் கத்தாரின் உறுதியான நிலைப்பாட்டை கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலைகளை அதிகரித்து கத்தார் பெட்ரோலியம்.!

ஏமன் நாட்டிற்கு இடையிலான பேச்சுவார்த்தைகளின் மூலம் ஏமனில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்ப்பதற்கான கத்தாரின் உறுதியான நிலைப்பாட்டை இந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது இரங்கலை தெரிவித்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…