கத்தார் Al Waab பிரதான பாலம் ஐந்து நாட்கள் மூடல்; அஷ்கல் அறிவிப்பு.!

Closure on Al Waab main bridge for five nights
Pic: Ashghal

கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி செல்லும் Sabah Al Ahmad Corridor-ல் உள்ள Al Waab பிரதான பாலாத்தை ஐந்து நாட்கள் இரவு நேரங்களில் மட்டும் மூடுவதாக கத்தார் பொதுப்பணி ஆணையம் (Ashghal) அறிவித்துள்ளது.

இந்த மூடல், நேற்று (13-10-2020) இரவு முதல் தொடங்கியுள்ளது என்றும், ஒவ்வொரு இரவும் ஆறு மணி நேரம் (இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை) மூடப்படும் என்றும், இது அக்டோபர் 17 செயல்படுத்தப்படும் என்றும் Ashghal தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் வருகின்ற வெள்ளி முதல் புதிய சீசன் தொடக்கம்.!

பொது போக்குவரத்து இயக்குநரகத்துடன் ஒருங்கிணைந்து Sabah Al Ahmad Corridor-ல் பணிகளை முடிக்கவே இந்த மூடல் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Salwa சாலை மற்றும் HIA நோக்கிச் செல்லும் பயணிகள் Al Waab signallised intersection-ஐ பயன்படுத்தலாம் என்றும், அல் ரயான் நோக்கிச் செல்லும் பயணிகள் Sabah Al Ahmad Corridor northbound bridge-ஐ பயன்படுத்தலாம் என்றும் Ashghal கூறியுள்ளது.

இதையும் படிங்க: கத்தார் Mesaimeer Interchange-ல் புதிய பாதை திறப்பு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…