கத்தாரில் COVID-19 தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் போட்டுக்கொண்ட மூத்த அதிகாரிகள்.!

COVID-19 vaccine second dose
Pic: Gulf-Times

கத்தாரில் கடந்த (23-12-2020) அன்று COVID-19 தடுப்பூசி பிரச்சாரம் தொடங்கியதையடுத்து, மூன்று வாரத்திற்கு பின்னர் Pfizer-BioNTech தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டு வருகிறது.

கத்தாரில் நேற்று (14-01-2021) Pfizer-BioNTech தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பல மூத்த சுகாதார அதிகாரிகள் போட்டுக்கொண்டனர்.

தோஹாவில் உள்ள அல் சைலியா மத்திய சந்தையில் ஏலம் நடத்த அனுமதி.!

இந்த தடுப்பூசியை, COVID-19 பற்றிய தேசிய சுகாதார மூலோபாயக் குழுவின் தலைவரும், ஹமாத் மருத்துவக் கழகத்தின் (HMC) தொற்று நோய்களின் தலைவருமான Dr.Abdullatif al-Khal, MoPH-ன் பொது சுகாதார இயக்குனர் ஷேக் Dr.Mohamed al-Thani, தேசிய தொற்று நோய்களுக்கான ஆயத்தக் குழுவின் இணைத் தலைவரும், MoPH-ன் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் தொற்று நோய்களின் இயக்குநருமான Dr.Hamad Eid al-Romaihi மற்றும் ஹமாத் மருத்துவக் கழகத்தின் (HMC) தொற்று நோய் மையத்தின் மருத்துவ இயக்குனர் Dr.Muna al-Maslamani ஆகியோர் போட்டுக்கொண்டனர்.

COVID-19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்டு நன்றாக உள்ளேன் என்றும், இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட போதிலும் அனைவரும் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என ஹமாத் மருத்துவக் கழகத்தின் (HMC) தொற்று நோய் மையத்தின் மருத்துவ இயக்குனர் Dr.al-Maslamani தெரிவித்துள்ளார்.

கத்தாரில் COVID-19 தடுப்பூசி குறித்து சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி; MoPH மறுப்பு.!

மேலும், COVID-19 தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்ட அனைத்து மக்களும் குறிப்பிட்ட தேதியில் COVID-19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும் என பொது சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

த்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…