கத்தாரில் விரைவாக நடைபெறும் COVID-19 தடுப்பூசி போடும் பணி.!

Covid19 vaccine campaign
Pic: MoPH

கத்தார் முழுவதும் தடுப்பூசி பிரச்சாரம் நேற்று (23-12-2020) தொடங்கப்பட்ட நிலையில் மக்களுக்கு பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் அங்கீகரிக்கப்பட்ட COVID-19 தடுப்பூசியை இலவசமாக வழங்கிய நாடுகளில் முதல் நாடாக கத்தார் இடம் பெற்றுள்ளது.

கத்தார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவர் Dr.அப்துல்லா அல் குபைசி முதல் நபராக Pfizer-BioNTech தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

கத்தாரில் COVID-19 தடுப்பூசி போடும் பணி துவக்கம்.!

சிரியா நாட்டை சேர்ந்த 88 வயதான Mohammed Frazat என்பவர் கத்தாரில் இரண்டாவது நபராகவும், நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்களில் தடுப்பூசி பெற்ற முதல் வெளிநாட்டவராகவும் இடம் பெற்றார்.

கத்தாரில் அமைந்துள்ள ஏழு சுகாதார மையங்களில் ஜனவரி 31ஆம் தேதி வரை 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், நாள்பட்ட பராமரிப்பு மற்றும் வீட்டு பராமரிப்பில் உள்ள பெரியவர்கள், தொற்றுநோயால் பாதிக்கப்படும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நாள்பட்ட நோயால் கடுமையாக பாதிக்கப்படும் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

கத்தார் WOQOD புதிய பெட்ரோல் நிலையத்தை திறந்துள்ளது.!

Pfizer தடுப்பூசியானது இரண்டு அளவுகளைக் கொண்டுள்ளது, இவை மூன்று வார இடைவெளியில் வழங்கப்பட வேண்டும் என dr.Al-Musleh கூறியுள்ளார்.

Pfizer-BioNTech COVID-19 தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் அனைத்து ஒழுங்குமுறை ஒப்புதல்களையும் கடந்துவிட்டது என்றும் dr.Al-Bayat தெரிவித்துள்ளார்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

  • Facebook
  • Twitter
  • Instagram
  • Telegram