தோஹா Al Bidda தெருவில் உள்ள பாதை மூன்று மாதங்களுக்கு மூடல்.!

Doha Al Bidda Street
Pic: Ashghal

தோஹாவில் உள்ள Al Bidda வீதியில் ஒரு பாதை நாளை (27-11-2020) முதல் மூன்று மாதங்களுக்கு மூடப்படும் என்று பொதுப்பணி ஆணையம் (Ashghal) அறிவித்துள்ளது.

Al Bidda தெருவில் போக்குவரத்திற்காக 600 மீட்டர் தூரத்திற்கு Wadi Al Sail முதல் Oryx சந்திப்பு வரை இரண்டு பாதைகள் திறந்திருக்கும்.

கத்தாரில் 10வது கட்டாரா பாரம்பரிய தோவ் (கப்பல்) விழா டிசம்பரில் தொடக்கம்.!

தோஹா மத்திய வளர்ச்சி மற்றும் அழகுபடுத்தும் திட்டத்தின் பணிகளை முடிக்க பொது போக்குவரத்து இயக்குநரகத்துடன் ஒருங்கிணைந்து இந்த மூடலானது மேற்கொள்ளப்படுகிறது.

பாதை மூடப்படுவதால், Mohammed Bin Thani வீதியிலிருந்து Al Bidda வீதிக்கு வலதுபுறம் ஒரு பாதை மூடப்படும் என்றும், ஒரு பாதையை போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், Mohammed Bin Thani வீதியிலிருந்து Al Bidda வீதிக்கு இடதுபுறம் திரும்பும் பாதைகள் பிரதான வண்டிப்பாதையில் இருந்து இடதுபுறம் செல்ல அனுமதிக்கப்படும்.

தற்காலிகமாக பாதை மூடப்படவதால், வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தும் வகையில் சாலை அடையாளங்கள் வைக்கப்படும் மற்றும் வாகனத்தில் வேக வரம்பைப் கடைபிடிக்குமாறு பொதுப்பணி ஆணையம் (Ashghal) கேட்டுக் கொண்டுள்ளது.

கத்தார் விமான நிலையத்தில் பிறந்த குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய தாய் கண்டுபிடிப்பு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…