கத்தார் தேசிய தின அணிவகுப்பு: கத்தார் அமீரின் தந்தை உட்பட பலர் பங்கேற்பு.!

Father Amir attend QND Parade
Pic: @alraya_n

கத்தார் நாட்டில் இன்று (18-12-2020) வெள்ளிக்கிழமை நாட்டின் 49வது தேசிய தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த ஆண்டு COVID-19 காரணமாக விதிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், தோஹா கார்னிச்சில் இன்று காலை நடைபெற்ற 2020 தேசிய தின அணிவகுப்பில் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் கலந்து கொண்டார்.

கத்தார் தேசிய தினம்: குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார் கத்தார் அமீர்.!

மேலும், இதேபோல் கத்தார் அமீரின் தந்தை HH ஷேக் ஹமாத் பின் கலீஃபா அல் தானி அவர்களும் பங்கேற்றார்.

இந்த அணிவகுப்பில், ஷூரா கவுன்சில் சபாநாயகர் அஹ்மத் பின் அப்துல்லா பின் ஜைத் அல் மஹ்மூத் மற்றும் ஷூரா கவுன்சிலின் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், அமெரிக்க விமானப்படைகளின் மத்திய கட்டளை தளபதி Lieutenant General Gregory Guillot  உட்பட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

2030 ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்த கத்தார் தேர்வு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…