கத்தார் 2022 உலகக் கோப்பை ஏற்பாடுகள் தீவிரம்; FIFA தலைவர் பாராட்டு.!

FIFA President praises
Pic: QNA

கத்தாரில் புதிதாக அகமது பின் அலி (Ahmed bin Ali) விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டதை தொடர்ந்து, FIFA அமைப்பின் தலைவர் HE கியானி இன்ஃபாண்டினோ (Gianni Infantino) அவர்கள் நேற்று (18-12-2020) 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான தற்போதைய ஏற்பாடுகளை பாராட்டியுள்ளார்.

FIFA அமைப்பின் தலைவர்‌ அகமது பின் அலி அரங்கம் ஒரு அருமையான இடம் என்றும், உலகக் கோப்பைக்கான சரியான அரங்காக இருக்கும் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கத்தார் ஹமாத் விமான நிலையத்தில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பறிமுதல்.!

கத்தாரில் புதிய அரங்கத்தை கட்டி முடித்ததற்கு வாழ்த்து தெரிவித்த அவர், உலகக் கோப்பைக்கு நாடு நன்கு தயாராக உள்ளது என்றும் கூறினார்.

மேலும், மத்திய கிழக்கு மற்றும் அரபு உலகில் 2022ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பை மறக்கமுடியாத போட்டியாக நடைபெற உள்ளது என்று FIFA அமைப்பின் தலைவர் கியானி இன்ஃபாண்டினோ தெரிவித்துள்ளார்.

கத்தார் தேசிய தினம்: FIFA தலைவருடன் ‌கத்தார் அமீர் சந்திப்பு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…