வளைகுடா நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தம்: FIFA தலைவர் வரவேற்பு.!

FIFA President welcomes
Pic: Reuters

சவுதி அரேபியாவில் உள்ள அல் உலா (Al Ula) நகரில் நேற்று முன்தினம் (05-01-2021) நடைபெற்ற 41வது வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டத்தில் வளைகுடா நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர அல் உலா ஒற்றுமை ஒப்பந்தத்தில் வளைகுடா தலைவர்கள் கையெழுத்திட்டனர்.

இதன் பின்னர், ஊடகங்களுக்கு உரையாற்றிய சவுதி வெளியுறவு அமைச்சர் விமானங்களை தொடங்குவது உட்பட கத்தார் நாட்டுடனான உறவை மீட்டெடுக்க நான்கு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா பட்டத்து இளவரசருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கத்தார் அமீர்.!

இந்த உச்சிமாநாடு மூலம் கத்தார் உடனான மோதல்கள் முழுமையாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது என்றும், இராஜதந்திர உறவுகள் முழுமையாக திரும்பியது என்றும் சவுதி வெளியுறவு அமைச்சர் Faisal bin Farhan Al-Saud செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) உறுப்பு நாடுகளுக்கு இடையே ஒரு வரலாற்று அறிவிப்பில் கையெழுத்திட்டதை FIFA தலைவர் கியானி இன்ஃபாண்டினோ (Gianni Infantino) வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நல்லிணக்கத்திற்கான பாதையில் பிராந்தியத்திற்கு மிகவும் சாதகமான படியாக இருக்கும் என்றும், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அனைத்து GCC உறுப்பினர்களையும் FIFA வாழ்த்துகிறது என்றார்.

மேலும், 2021ம் ஆண்டின் இறுதியில் நடைபெறும் FIFA அரபு கோப்பை 22 அரபு நாடுகளை ஒன்றிணைத்து, முழு பிராந்தியத்திலிருந்தும் மில்லியன் கணக்கான ரசிகர்களை ஒன்றிணைக்கும் என்றும், மேலும் இது கத்தாரில் நடைபெறும் 2022 FIFA உலகக் கோப்பைக்கான தயாரிப்புகளில் ஒரு முக்கியமான படியாக இருக்கும் என்றார்.

கத்தார் உடனான உறவை மீட்டெடுக்க நான்கு நாடுகள் ஒப்புதல்; விரைவில் விமானங்களும் அனுமதி.!

த்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…