கத்தாரில் சுமார் 37,000க்கும்‌ மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி.!

flu vaccine Qatar
Pic: The Peninsula Qatar

கத்தார் சுகாதாரப் பணியாளர்களுக்கு காய்ச்சல் வராமல் பாதுகாக்க,  அவர்களிடமிருந்து அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நோயாளிகளுக்கு காய்ச்சல் பரவுவதைக் குறைக்க காய்ச்சல் தடுப்பூசி பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த காலத்தை விட 37,000க்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்கள் தற்போது பருவகால காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்டனர் என பொது சுகாதார அமைச்சகத்தின் சுகாதார பாதுகாப்பு மற்றும் தொற்று நோய்களின் இயக்குநர் Dr. Hamad Eid Al Romaihi தெரிவித்துள்ளார்.

கத்தார் தேசிய தினம்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு.!

தடுப்பூசி போடப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் முதன்மை சுகாதாரக் கழகம் (PHCC) மற்றும் ஹமாத் மருத்துவக் கழகம் (HMC) ஆகியவற்றில் பணிபுரிகின்றனர், காய்ச்சல் தடுப்பூசியிலிருந்து அதே அளவிலான பாதுகாப்பை உருவாக்க வயதான மற்றும் ஆபத்தான நோயாளிகளை சுகாதாரப் பணியாளர்கள் கவனித்து கொள்கின்றனர் என Al Romaihi தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற நோயாளிகள் தங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உடையோரை நம்பியிருக்கிறார்கள் என்றும், இந்த ஆண்டு பல சுகாதார ஊழியர்கள் காய்ச்சல் தடுப்பூசியை எடுத்துக்கொள்வது  சமூகத்திற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைகிறது என்றும் சுகாதார பாதுகாப்பு மற்றும் தொற்று நோய்களின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கத்தார் MOPH குறைந்த ஆபத்துள்ள நாடுகளின் புதுப்பிப்பு பட்டியல் வெளியீடு.!

இந்த இலவச பருவகால காய்ச்சல் தடுப்பூசியானது, முதன்மை சுகாதாரக் கழகத்தின் (PHCC) சுகாதார நிலையங்கள், ஹமாத் மருத்துவக் கழகத்தின் (HMC) புறநோயாளி கிளினிக்குகள், கத்தார் முழுவதும் நியமிக்கப்பட்ட தனியார் மற்றும் அரை தனியார் கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…