கத்தாரில் மூடுபனி உருவாவதற்கான வாய்ப்புகள் தொடரும்; QMD ட்வீட்.!

fog formation expected
Pic: @qatarweather

கத்தாரில்‌ பனிமூட்டமான வானிலை இன்று (15-12-2020) மற்றும் நாளை எதிர்பார்க்கப்படுவதாக கத்தார் வானிலை ஆய்வுத்துறை (QMD) தெரிவித்துள்ளது.

மூடுபனி உருவாவதற்கான வாய்ப்புகள் இன்று மற்றும் நாளை வரை (டிசம்பர் 15, 16, 2020) தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக கத்தார் வானிலை ஆய்வுத்துறை ட்விட்டரில் கூறியுள்ளது.

கத்தார் தேசிய தின அணிவகுப்பில் இவர்களுக்கு மட்டுமே அனுமதி.!

இந்த வானிலை நிலைமை சில நேரங்களில் 2 கிலோமீட்டருக்கும் குறைவாகக் கிடைமட்டத் தெரிவுநிலையை குறைக்க வழிவகுக்கிறது என்றும் QMD தெரிவித்துள்ளது.

மேலும், மூடுபனி நிலவுவது அதிகாலை வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை ஆய்வுத்துறை குறிப்பிட்டுள்ளது.

இந்த வானிலை நிலைமையில், பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை QMD கேட்டுக்கொண்டுள்ளது.

தொழிலாளர் தங்குமிடங்களில் ஆய்வு பிரச்சாரம் தொடக்கம்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…