கத்தார் ஹமாத் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக பரவும் வதந்தி; HIA மறுப்பு.!

Hamad international airport
Pic: @HIAQatar

கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையம் (HIA) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்படுவதற்கு ஹமாத் சர்வதேச விமான நிலையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அனைத்து பயணிகளுக்காகவும் ஹமாத் சர்வதேச விமான நிலையம் வழக்கம் போல் செயல்படும் என HIA உறுதிப்படுத்தியுள்ளது.

கத்தாரில் களைகட்டும் 5வது அறுவடை திருவிழா.!

கத்தார் நுழைவதற்கான கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்ந்து பொது சுகாதார அமைச்சகத்தால் கவனமாக நிர்வகிக்கப்படுவதாகவும், இது MoPH இணையதளத்தால் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் ஹமாத் சர்வதேச விமான நிலையம் ட்வீட் செய்துள்ளது.

மேலும், அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து துல்லியமான தகவல்களை மட்டும் பார்க்குமாறும், அடையாளம் தெரியாமல் வரும் வதந்திகளைப் புறக்கணிக்குமாறும் பொதுமக்களுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம் என HIA குறிப்பிட்டுள்ளது.

சவுதியில் கெரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட பட்டத்து இளவரசர்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…