கத்தாரில் உள்ள புனித குர்ஆன் கற்றல் மையங்கள் அடுத்த வாரம் முதல் மீண்டும் திறப்பு.!

Holy Quran Learning Centers
Pic: File/The Peninsula

கத்தார் Awqaf மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சகம், பொது சுகாதார அமைச்சகத்தின் (MoPH) ஒத்துழைப்புடன், 47 புனித குர்ஆன் கற்றல் மையங்களை அடுத்த வாரம் முதல் மீண்டும் திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

அமைச்சகம் நடத்தும் பெண்களுக்கான 22 புனித குர்ஆன் கற்றல் மையங்களும் இந்த திறப்பில் உள்ளடங்கும் என அமைச்சகம் ட்வீட்டரில் தெரிவித்துள்ளது.

கத்தாரில் உள்ள இந்த இரண்டு பெட்ரோல் நிலையங்கள் தற்காலிகமாக மூடல்.!

தனித்தனி கட்டிடங்களில் இயங்கும் ஆண்களுக்கான நான்கு புனித குர்ஆன் கற்றல் மையங்களும் அடுத்த வாரம் முதல் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அமைச்சகத்தின் மேற்பார்வையில் மொத்தம் 21 தனியார் புனித குர்ஆன் கற்றல் மையங்களும் இதே அட்டவணையில் மீண்டும் திறக்கப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார், எகிப்து இடையே மூன்று ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஏற்படும் நல்லுறவு.!