கத்தாரில் இந்த வாரம் ஈரப்பதமான வானிலை நிலவும்; வானிலை ஆய்வுத்துறை.!

Humid weather conditions
Pic: Qatar Weather

கத்தார் நாட்டில் ஈரப்பதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், நாட்டின் சில பகுதிகளில், மூடுபனி ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கத்தார் வானிலை ஆய்வுத்துறை ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

ஈரப்பதம் இன்று இரவு முதல் வார இறுதி வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, சில இடங்களில் இரவு மற்றும் அதிகாலையில் மூடுபனி உருவாகும் வாய்ப்பு உள்ளது என QMD குறிப்பிட்டுள்ளது.

கத்தாரில் புதிதாக இரண்டு பொது பூங்காக்கள் திறப்பு.!

மேலும், ஈரப்பதத்தின் அதிகரிப்பு சில நேரங்களில், 2 கிலோமீட்டருக்கு குறைவான தெரிவுநிலைக்கு வழிவகுக்கும் என்றும் வானிலை ஆய்வுத்துறை கூறியுள்ளது.

கத்தாரில் உள்ள அனைத்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களும் கவனமாகவும், கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்க வேண்டும் என QMD கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், காற்று தென்கிழக்கு திசையிலிருந்து வடகிழக்கை நோக்கி லேசானது முதல் மிதமான வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் பல கடைகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் கைது..!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…