கத்தாரில் கட்டாரா பாரம்பரிய தோவ் (கப்பல்) விழா நிறைவடைந்தது.!

Katara Dhow Festival concludes
Pic: Katara

கத்தாரில் பல நாடுகளின் பங்களிப்புடன் நடைபெற்ற பாரம்பரியமான தோவ் (கப்பல்) விழாவின் 10ஆம் பதிப்பு நேற்று முன்தினம் (05-12-2020) நிறைவடைந்தது.

தோவ் விழாவின் ஐந்து நாட்களிலும் சுகாதார அமைச்சகம் தெரிவித்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைவரும் கடைபிடித்தனர்.

கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 4 பேர் கைது‌.!

கடந்த ஆண்டுகளை போலவே, இந்த விழாவில் பல போட்டிகள் மற்றும் கடல் நிகழ்ச்சிகள் வகைப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், மூதாதையரின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் கலாச்சாரத்தை மீட்டெடுப்பது, நாட்டுப்புற பாரம்பரியத்தை பாதுகாப்பது போன்ற பண்டைய கடல் வரலாற்றை வெளிச்சம் போட்டு காட்டினர்.

இந்த விழாவின் முதல் நாளில் தொடங்கிய Haddaq Al Saif மீன்பிடி போட்டியில், பங்கேற்பாளர்களால் மிகப் பெரிய மீன்களை பிடித்து கொண்டு வந்தனர், பிடிக்கப்பட்ட மீன்கள் இறுதி நாளில் கணக்கிடப்பட்டது.

இந்த போட்டியில் 1.9 கிலோ மீன்களை பிடித்த Sultan Dokhi Al Muraikhi, Nasser Ali Badr Khalifa மற்றும் Abdullah Bujsum ஆகியோருக்கு QR 4,000 பரிசு வழங்கப்பட்டது.

வளைகுடா நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஒப்பந்தம்: குவைத் அமீர் மகிழ்ச்சி.!

இந்த போட்டிகளைத் தவிர, கடல்சார் பாரம்பரிய சேகரிப்புகள், பாரம்பரிய கைவினைப் பொருட்கள் மற்றும் கப்பல் கட்டும் செயல்முறை ஆகியவற்றைக் காண்பிக்கும் பட்டறைகள் தனித்துவமான காட்சிகளுடன் தனித்து நின்றன.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…