உள்நாட்டு விவசாயிகளை தொடர்ந்து ஊக்குவிக்கும் கத்தார்; அல் மீராவிலும் விற்பனை தொடக்கம்.!

Local Fruits and Vegetables
Pic: The Peninsula

கத்தாரில் உள்ள பிரபல அல் மீரா நுகர்வோர் பொருட்கள் நிறுவனம் (QPSC) நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் (MME) ஒத்துழைப்புடன் தன்னுடைய அனைத்து கிளைகளிலும் உள்ளூர் பழங்கள் மற்றும் காய்கறிகளை சந்தைப்படுத்த தொடங்கியுள்ளது.

உள்ளூர் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோருக்கு, அல் மீராவின் தொடர்ச்சியான ஆதரவு இருக்கும் என தெரிவித்துள்ளது.

கத்தார் வரும் பயணிகளுக்கு மறு நுழைவு எளிதாகிறது; தானியங்கி மூலம் அனுமதி.!

பண்ணை உரிமையாளர்களின் தொடர்ச்சியான முயற்சியின் காரணமாக கடந்த வருடங்களை ஒப்பிடும்போது, உற்பத்தியை கணிசமாக அதிகரித்துள்ளது மற்றும் உள்ளூர் பண்ணைகளின் சாதனைகள் கொண்டாடப்படுகிறது.

மேலும், சுமார் 150-க்கும் மேற்ப்பட்ட பண்ணைகள் வர்த்தக நிறுவனங்களில் தங்கள் தயாரிப்புகளுக்கு உண்டான சந்தைப்படுத்தல் தளத்தைப் பெறுவதற்காக நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் ஆதரிக்கப்படும் பல்வேறு புதிய பண்ணை காய்கறிகளுடன் இந்த முயற்சியில் பங்கேற்றுள்ளது.

நாட்டின் தேசிய சில்லறை விற்பனையாளராக, அல் மீரா உள்ளூர் விவசாயிகளுடன் நெருக்கமான உறவைப் பெற்றுள்ளது மற்றும் அதன் கிளைகளில் தேசிய தயாரிப்புகளை வென்றெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அல் மீரா கிளை ஒன்றில், விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள உள்ளூரில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள்:

Pic: Al Meera
Pic: Al Meera

கத்தாரில் தொழிலாளர்கள் வேலை மாற்ற புதிய நடைமுறை.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…