கத்தார் MOPH குறைந்த ஆபத்துள்ள நாடுகளின் புதுப்பிப்பு பட்டியல் வெளியீடு.!

Qatar Covid19 Green List
Pic: The Peninsula

கத்தார் பொது சுகாதார அமைச்சகம் (MoPH) COVID-19 குறைந்த ஆபத்துள்ள நாடுகளின் (Green List) புதுப்பிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் வருகின்ற டிசம்பர் 18ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

COVID-19 தொற்றால் பாதிப்படைந்துள்ள நாடுகளில் குறைந்த ஆபத்துள்ள நாடுகள் என கண்டறியப்படும் நாடுகளிலிருந்து கத்தார் நாட்டிற்கு வருபவர்கள் விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான பரிசோதனையை மேற்கொள்வது அவசியம் என்றும், ஒரு வாரத்திற்கு வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தப்படுவதைக் கடைப்பிடிப்பதற்கான முறையான உறுதிமொழியில் கையெழுத்திட வேண்டும் என்றும் அரசு தகவல் தொடர்பு அலுவலகம் (GCO) முன்னதாக அறிவித்திருந்தது.

கத்தார் தேசிய தினம்: விடுமுறை நாட்களை அறிவித்தது அமிரி திவான்.!

பொது சுகாதார அமைச்சகம் நேற்று (14-12-2020) குறைந்த ஆபத்துள்ள 17 நாடுகளின் புதுப்பிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா இடம் பெறவில்லை.

1. Oman
2. Brunei Darussalam
3. Thailand
4. China (A. Hong Kong SAR – China, B. Macau SAR – China)
5. Vietnam
6. Malaysia
7. South Korea
8. Singapore
9. Japan
10. Myanmar
11. Australia
12. New Zealand
13. Mexico
14. Cuba
15. Mauritius
16. Iceland
17. Ireland

Pic: MoPH

கத்தாரில் இந்த மாத இறுதிக்குள் வரவிருக்கும் கோவிட்-19 தடுப்பூசிகள்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…