விவசாயத்தை தொடர்ந்து ஊக்குவிக்கும் கத்தார்.! கடந்த மாதத்தில் சுமார் 3.5 மில்லியன் காய்கறிகள் விற்பனை.!

Mahaseel vegetables local market
Pic: File/The peninsula

கத்தார் சந்தையில் கடந்த ஜனவரி மாதத்தில் 3.5 மில்லியன் கிலோ உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகளை வெற்றிகரமாக விற்பனை செய்துள்ளதாக சந்தைப்படுத்தல் மற்றும் விவசாய சேவைகளுக்கான மஹாசீல் (Mahaseel) நிறுவனம் நேற்று (06-02-2021) அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, ​​உள்ளூர் சந்தையில் புதிய காய்கறிகளை விற்பனை செய்யும் சதவீதத்தை மஹாசீல் மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது என Hassad நிறுவனத்தின் CEO Eng. Mohamed Al-Sadah தெரிவித்துள்ளார்.

கத்தாரில் இன்று ஒரே நாளில் 642 பேர் மீது நடவடிக்கை; அதிரடி காட்டிய அதிகாரிகள்.!

தற்போது, உள்ளூர் சந்தையில் 30க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான காய்கறிகளை மஹாசீல் சந்தைப்படுத்துகிறது, கடந்த ஆண்டு உள்ளூர் சந்தையில் சுமார் 19 மில்லியன் கிலோ காய்கறிகளை மஹாசீல் வெற்றிகரமாக விற்பனை செய்துள்ளது என Mohamed Al-Sadah கூறியுள்ளார்.

மேலும், சந்தைப்படுத்தல் மற்றும் விவசாய சேவைகளின் பயனாக 350 உள்ளூர் பண்ணைகள் தற்போது மகாசீலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கத்தார் தேசிய விளையாட்டு தினத்தில் பொது மக்களுக்கு அனுமதியில்லை.!

இந்த நிறுவனம் விவசாயிகளுக்காக ஒரு பிரத்யேக மொபைல் பயன்பாட்டை உருவாக்கியுள்ளது, விவசாயிகள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து சேவைகளையும், தகவல்களையும் எளிதாக அணுக முடியும் என்று குறிப்பிட்டுள்ளது.