கத்தார் வடகிழக்கு பகுதியில் இடியுடன் கூடிய கனமழை..!

Qatar receive thundery rain
Pic: The Peninsula Qatar

கத்தாரின் வடகிழக்கு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை செய்துள்ளதாக  வானிலை ஆய்வுத்துறை (QMD) தெரிவித்துள்ளது.

சமீபத்திய ரேடார் படங்கள் நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் இடியுடன் கூடிய மழையைக் காட்டுவதாக கத்தார் வானிலை ஆய்வுத்துறை ட்வீட்டில் கூறியுள்ளது.

COVID-19: கத்தாரில் இன்று (நவ.08) ‌புதிதாக 190 பேர் பாதிப்பு.!

கத்தாரின் Ras Laffan மற்றும் Al Jassasiya ஆகிய பகுதிகளில் பெய்த மழையின் காணொளியை QMD அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

cumulus மேகங்களிலிருந்து வீழ்ச்சியடைந்த காற்று காரணமாக வடகிழக்கில் Ras Laffan-னை நோக்கி 2 கிலோ மீட்டருக்கு குறைவான தெரிவுநிலையை நாங்கள் கவனிக்கிறோம் என்று QMD அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கத்தார் வானிலை ஆய்வுத்துறை அனைத்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களும் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை மற்றும் குறைந்த தெரிவுநிலை குறித்து கவனமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், கமலா ஹாரிஸ்க்கு கத்தார் அமீர் வாழ்த்து..!

கத்தார் வானிலை ஆய்வுத்துறை மழைக் காலங்களில் பின்பற்றபட வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த காணொளியை வெளியிட்டுள்ளது:

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…