கத்தாரில் முகக்கவசம் அணிய தவறியதற்காக இதுவரை 2,000 பேருக்கு மேல் நடவடிக்கை.!

Not wearing masks
Pic: Abdula Basit/ Peninsula Qatar

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கத்தாரில் இன்று (30-11-2020) முகக்கவசம் அணிய தவறியதற்காக 169 பேரை உள்துறை அமைச்சகம் (MoI) பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பியுள்ளது.

உள்நாட்டு விவசாயிகளை தொடர்ந்து ஊக்குவிக்கும் கத்தார்; அல் மீராவிலும் விற்பனை தொடக்கம்.!

கத்தாரில், ஒரு வாகனத்தில் (குடும்ப உறுப்பினர்களை தவிர்த்து) ஓட்டுநர் உட்பட 4 நபர்கள் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த உத்தரவை மீறியதற்காக 20 நபர்கள் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது ‌

கத்தாரில் தற்போது வரை முகக்கவசம் அணிய தவறிய 2,164 பேர் மற்றும் வாகனத்தில் நான்கு பேருக்கு மேல் சென்றதற்காக 153 நபர்களையும் அமைச்சகம் பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பியுள்ளது.

கத்தாரில் பல இடங்களில் நேற்று மிதமான மழை; வானில் தோன்றிய வானவில்.!

மேலும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ள முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு  அதிகாரிகள் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…