கத்தாரில் உள்ள பொது பூங்காக்களுக்கான கட்டண விபரங்கள் அறிவிப்பு.!

Public Parks entrance fees
Pic: The Peninsula Qatar

பொது பூங்காக்கள் மற்றும் அதன் சேவைகளுக்கான நுழைவு கட்டணத்தை நிர்ணயிக்கும் 2020ஆம் ஆண்டின் 247ம் முடிவின்படி, நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் பூங்காக்களுக்கான கட்டணங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: S’hail 2020 கண்காட்சி: கத்தார் பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டார்.!

அல் கோர் பூங்கா கட்டண விபரங்கள்

நுழைவு கட்டணம்:

  • அல் கோர் பூங்காவில் நுளைவு கட்டணம் பெரியவர்களுக்கு – QR 15 (Full Day)
  • பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறப்பு தேவை உடையவர்களுக்கு – QR 10

பூங்கா உள்ளே:

  • பூங்காவிற்குள் உள்ள சிறப்பு நிகழ்வுகளுக்கு நுழைவு கட்டணம் – QR 50 (Full Day)
  • விலங்குகளுக்கு உணவளிப்பதற்கான கட்டணம் – QR 50

ரயில் பயணம்:

  • அல் கோர் பூங்காவில் உள்ள ரயிலுக்கான கட்டணம் – QR 5
  • சிறப்புத் தேவை உடையவர்களுக்கு ரயில் கட்டணம் இலவசம்.

இதையும் படிங்க: பிரெஞ்ச் பொருட்கள் விற்பனை நிறுத்தம் – அல் மீரா நிறுவனம் அறிவிப்பு.!

மற்ற பூங்காக்களைப் பொறுத்தவரையில், அமைச்சகத்தின் முடிவின்படி தீர்மானிக்கப்படும் என்றும், ஒரு முழு நாள் டிக்கெட்டுக்கான கட்டணம் QR 10 மற்றும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறப்பு தேவை உடையவர்களுக்கு கட்டணம் QR 5ஆக இருக்கும் என்றும், நிகழ்வுகள் மற்றும் விழா காலங்களின்போது இது QR 30ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…