சவுதி வான்வெளி வழியாக விமானங்களை இயக்க தொடங்கியது கத்தார் ஏர்வேஸ்.!

Qatar Airways begins rerouting
Pic: Qatar Airways

கத்தார் மற்றும் சவுதி அரேபியா இடையே நில வழி, வான் வழி மற்றும் கடல் வழி எல்லைகளை போக்குவரத்துக்கு திறக்க ஒப்பந்தம் எட்டப்பட்ட நிலையில், கடந்த திங்கட்கிழமை (04-01-2021) இரவு முதல் எல்லைகள் திறக்கப்பட்டது.

இந்நிலையில், கத்தாரின் தேசிய விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸ், சவுதி அரேபியா வான்வெளி வழியாக விமானங்களை மாற்றத் தொடங்கியுள்ளது.

கத்தார் நாட்டிற்குள் சுமார் 5,528 கிலோ புகையிலை பொருட்கள் கடத்த முயற்சி.!

இதுகுறித்து கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் நேற்று (07-01-2021) ட்வீட்டில், இன்று மாலை கத்தார் ஏர்வேஸ் சவுதி அரேபியா வான்வெளி வழியாக சில விமானங்களை மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளது என்றும், முதல் திட்டமிடப்பட்ட விமானம் QR 1365 ஆகும், இது தோஹா முதல் ஜோகன்னஸ்பர்க் (Johannesburg) வரை ஜனவரி 7, இன்று மாலை 20.45 மணிக்கு எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட தடைக்கு பின்னர், சவுதி அரேபியா வான்வழி வழியாக செல்லும் முதல் விமானம் இதுவாகும்.

சவுதியில் நடைபெற்ற 41வது GCC உச்சி மாநாட்டின் இறுதி அறிக்கை.!

த்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…