அமீரகத்திற்கு விமான சேவைகளை தொடங்கியது கத்தார் ஏர்வேஸ்.!

Qatar Airways flights UAE
Pic: Qatar airways

கத்தார் தேசிய விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸ் நேற்று (27-01-2021) முதல் அமீரகத்திற்கு தனது விமான சேவைகளை மீண்டும் இயக்கத் தொடங்கியுள்ளது.

கத்தார் ஏர்வேஸ் அமீரகத்திற்கு விமானங்களை மீண்டும் தொடங்கியுள்ளது என்றும், நேற்று துபாய்க்கு இரண்டு விமானங்களை தொடங்கியது, அதைத்தொடர்ந்து இன்று முதல் அபுதாபிக்கு தினசரி விமானத்தை இயக்க உள்ளது என்றும் கத்தார் ஏர்வேஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

கத்தாரில் Al Zaeem Air கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா: அமீர் பங்கேற்பு.!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பயணிகள் கத்தார் ஏர்வேஸின் மிகப்பெரிய நெட்வொர்க் மூலம் 800க்கும் மேற்பட்ட வாராந்திர அதிர்வெண்களுடன் 120க்கும் மேற்பட்ட இடங்களுக்கு இணைக்கும் திறனைப் பெறுவார்கள் என கத்தார் ஏர்வேஸ் குறிப்பிட்டுள்ளது.

கத்தார் தேசிய விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸ் அல் உலா ஒப்பந்தத்திற்கு பிறகு இந்த மாத தொடக்கத்தில் சவுதி அரேபியாவுக்கான தனது விமானங்களை மீண்டும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

கத்தாருக்கு நேரடி விமான சேவைகளை தொடங்கியது ஏர் அரேபியா.!