கத்தார் ஏர்வேஸ் இந்த நகரத்திற்கு நேரடி விமான சேவைகளை தொடங்கியது.!

Qatar Airways resumes flights
Pic: Qatar airways

கத்தார் ஏர்வேஸ் நேற்று (18-01-2021) முதல் எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு தினசரி விமான சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.

கத்தார் ஏர்வேஸ் எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு தினசரி விமானங்களை அதன் அதிநவீன Boeing 787 Dreamliner- உடன் இயக்குகிறது.

கத்தார் ஏர்வேஸ் QR 1301 விமானம் ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று புறப்பட்டு எகிப்து தலைநகர் கெய்ரோ சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.

கத்தார், எகிப்து இடையே நேரடி‌ விமானங்களை இயக்க முடிவு.!

கத்தார் ஏர்வேஸ் வருகின்ற ஜனவரி 25ம் தேதி முதல் எகிப்து நகரில் உள்ள அலெக்ஸாண்ட்ரியாவுக்கு விமான சேவையை மீண்டும் தொடங்க உள்ளது.

எகிப்திலிருந்து பயணிக்கும் கத்தார் ஏர்வேஸ் பயணிகள் இப்போது அதன் அதிநவீன மையமான ஹமாத் சர்வதேச விமான நிலையம் வழியாக 110க்கும் மேற்பட்ட உலகளாவிய இடங்களுக்கு தடையற்ற இணைப்பை அனுபவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரின் தேசிய கேரியர் தனது வலையமைப்பை மீண்டும் கட்டியெழுப்புகிறது, இது தற்பொழுது 110க்கும் மேற்பட்ட இடங்களுக்கு வந்துள்ளது. மார்ச் 2021 இறுதிக்குள் 130க்கு மேல் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

கத்தார் ஏர்வேஸ் இந்த நகரத்திற்கு நேரடி விமான சேவைகளை தொடங்கியது.!