கத்தார், இந்தியா இடையே ஆகஸ்ட் 18 முதல் சிறப்பு விமான சேவைகளை தொடங்க ஒப்புதல்.!

Qatar and India have agreed to start flights from 18 August to 31 August 2020
Photo: Getty Images

கத்தார், இந்தியா இரு நாடுகளுக்கு இடையே சிறப்பு விமான சேவைகளை இயக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 31 வரை சிறப்பு விமான சேவைகள் இயக்கப்படும் என்றும், இந்தியா மற்றும் கத்தாருக்கு சொந்தமான விமானங்கள் மூலம் விமான சேவைகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தார் அஷ்கல் புதிய Duhail Al Gharraf‌ பாலத்தை திறந்துள்ளது..!

இந்தியாவிலிருந்து கத்தாருக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படுபவர்கள்:

  • கத்தார் குடிமக்கள்.
  • கத்தார் நாட்டின் செல்லுபடியாகும் விசா வைத்திருக்கும் இந்தியர்கள்.

இந்திய பயணிகள் கத்தாருக்கு பயணிக்க வேண்டி டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்னர், தாங்கள் வைத்திருக்கும் குறிப்பிட்ட விசா பிரிவில் கத்தாருக்குள் நுழைய இந்திய நாட்டினருக்கு பயண  தடை இல்லை என்பதை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களில் உறுதி செய்து கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.

கத்தாரிலிருந்து இந்தியாவிற்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படுபவர்கள்:

  • கத்தாரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்.
  • கத்தார் பாஸ்போர்ட் வைத்திருக்கும் OCI (Overseas Citizens of India) அட்டைதாரர்கள்.
  • இந்திய உள்துறை அமைச்சகம் (MHA) வழிகாட்டுதலின் கீழ், எந்தவொரு வகையிலும் இந்திய அரசு வழங்கிய செல்லுபடியாகும் விசாவை வைத்திருக்கும் கத்தார் நாட்டு குடிமக்கள்.

மேலும், இரு நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்களும் தங்கள் வலைத்தளங்கள், பயண முகவர்கள் (Agents) மற்றும் உலகளாவிய விநியோக அமைப்புகள் (global distribution systems) மூலம் இந்தியாவில் இருந்து கத்தாருக்கும், கத்தாரில் இருந்து இந்தியாவிற்கும் விமான டிக்கெட்டுகளை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, கத்தாரில் இரத்ததான முகாம்கள்..!

பயணிகள் விமானத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்னர் அவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய நாட்டிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்படுமா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

?Twitter
https://twitter.com/qatartms

?Instagram  https://www.instagram.com/qatartms/