கத்தார் தூதரகம் லைபீரியா நாட்டிற்கு மருத்துவ உதவிகள் வழங்கல்.!

Qatar delivers Medical assistance
Pic: QNA

கொரோனா வைரஸ் தொற்று பரவலை எதிர்கொள்ள, கத்தார் தொண்டு நிறுவனம் வழங்கிய மருத்துவ உதவிகளை லைபீரியாவில் உள்ள கத்தார் தூதரகம் லைபீரியாவுக்கு வழங்கியுள்ளது.

இந்த மருத்துவ உதவி வழங்கும் நிகழ்ச்சியில், லைபீரியாவின் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்புக்கான உதவி வெளியுறவு அமைச்சர் Shedrick Jackson மற்றும்
Afro-Asian விவகாரங்களுக்கான வெளியுறவு அமைச்சரின் உதவியாளர் Naomi Gray மற்றும் பொது சுகாதார அவசர நடவடிக்கை மையம் (PHEOC) மேலாளர் Abraham Nyenswah மற்றும் லைபீரியாவின் கத்தார் தூதர் Fahad Rashid Al Muraikhi உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கத்தார் பண்ணைகளின் தயாரிப்புகளுக்கான புதிய விழா தொடக்கம்.!!

லைபீரியாவில் வைரஸ் தொற்று பரவலை எதிர்ப்பதற்கான முயற்சிகளை கத்தாரின் இந்த மருத்துவ உதவி முன்னெடுத்துச் சென்றுள்ளது என்றும், இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்கு இந்த உதவி வந்துள்ளது என்றும் லைபீரியா கத்தார் தூதர் Fahad Rashid Al Muraikhi தெரிவித்துள்ளார்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…