லெபனான் நாட்டு தலைவருடன் கத்தார் துணை பிரதமர் சந்திப்பு.!

Qatar Deputy Prime Minister
Pic: QNA

கத்தார் துணை பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான HE ஷேக் முஹம்மது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி அவர்கள் இன்று (09-02-2021) பெய்ரூட்டில் லெபனான் நாட்டின் தலைவர் HE General Michel Aoun அவர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகள் மற்றும் பொதுவான பிரச்சனைகள் குறித்து அவர்கள் மதிப்பாய்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் இன்று பல்வேறு அமைச்சகங்களின் கூட்டு செய்தியாளர் சந்திப்பு.!

இந்த சந்திப்பில், கத்தார் துணை பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான HE ஷேக் முஹம்மது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி அவர்கள் கத்தார் அமீரின் வாழ்த்துக்களை லெபனான் நாட்டு தலைவருக்கு தெரிவித்தார், லெபனான் நாட்டு மக்கள் மென்மேலும் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் அடைய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர், லெபனான் நாட்டு தலைவர் கத்தார் வெளியுறவு அமைச்சரிடம் கத்தார் அமீர் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்தினார் மற்றும் கத்தார் நாட்டு மக்கள் மென்மேலும் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் அடைய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா விதிமீறல்; கத்தாரில் மூன்று கடைகளை மூடியது அமைச்சகம்.!