கத்தாரின் நிவராண உதவிகள் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு வந்தடைந்தது.!

Qatar Embassy Delivers Aid
Pic: QNA

பிலிப்பைன்ஸ் நாட்டில் வாக்கோ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கத்தார் அனுப்பிய நிவாரண உதவிகள் நேற்று முன்தினம் (04-12-2020) பிலிப்பைன்ஸ் விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.

கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களின் உத்தரவையடுத்து, கத்தார் தூதரகம் நிவாரண உதவிகளை அனுப்பியுள்ளது.

வளைகுடா நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஒப்பந்தம்: குவைத் அமீர் மகிழ்ச்சி.!

இந்த உதவியில், 40 டன் உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்கள் அடங்கும். கூடாரங்கள், தண்ணிர், மின்சார ஜெனரேட்டர்கள் மற்றும் மீட்பு படகுகள் போன்றவைகளும் அனுப்பப்பட்டுள்ளது.

கத்தார் அபிவிருத்திக்கான நிதியம் (QFFD) மற்றும் அமீரி விமானப்படையின் ஒத்துழைப்புடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிவாரண உதவிகள் கொண்டு செல்லப்பட்டது.

இந்த உதவி விநியோக விழாவில் Philippine Red Cross Society தலைவர் Senator Richard Gordon மற்றும் பிலிப்பைன்ஸில் உள்ள கத்தார் தூதர் Dr. Ali bin Ibrahim Al Maliki ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், HE Senator Richard Gordon அவர்கள் கத்தார் வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸில் கோரத்தாண்டவமாடிய வாம்கோ புயல்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வாரி வழங்கிய கத்தார்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…