கத்தார் பெட்ரோலியம் நவம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலைகள் அறிவிப்பு.!

Qatar Fuel Prices January
Poc: WOQOD

கத்தார் பெட்ரோலியம் நவம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலைகளை இன்று (31-10-2020) அறிவித்துள்ளது. அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், நவம்பர் மாதம் எரிபொருள் விலைகளை சற்று குறைந்திருக்கின்றது.

புதிய விலைப்பட்டியலின் படி, நவம்பர் 01 முதல் பிரீமியம் பெட்ரோல் லிட்டருக்கு QR 1.20 ரியால்களாக விற்பனையாகும். இது அக்டோபர் மாதத்தில் விற்கப்பட்டு வந்த விலையை விட 5 திர்ஹம்கள் குறைவாகும்.

கத்தார் Al Farkiah கடற்கரைக்கு வாரம் இருமுறை இவர்கள் மட்டும் செல்ல அனுமதி.!

மேலும், சூப்பர் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு QR 1.25 ரியால்களுக்கு விற்பனையாகும்‌. இது அக்டோபர் மாதத்தில் விற்கப்பட்டு வந்த விலையை விட 5 திர்ஹம்கள் குறைவாகும்.

அத்துடன், ஒரு லிட்டர் டீசல் QR 1.10 ரியால்களுக்கு விற்பனையாகும். இது அக்டோபர் மாதத்தில் விற்கப்பட்டு வந்த விலையை விட 5 திர்ஹம்கள் குறைவானதாகும்.

Pic: WOQOD

கத்தாரில் அக்டோபர் மாததில் எரிபொருள் விலைகள் சற்று அதிகரித்திருந்த நிலையில், நவம்பர் மாதத்தில் கத்தார் பெட்ரோலியம் சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

துருக்கி சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கத்தார் அரசு உதவ தயார்..!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…