கத்தாரில் இந்த மாத இறுதிக்குள் வரவிருக்கும் கோவிட்-19 தடுப்பூசிகள்.!

Qatar Get Covid19 vaccine
Pic: screengrab from Al-Kass Channel

கத்தாரில் வருகின்ற நாட்களில் கோவிட் -19 தடுப்பூசியின் முதல் தொகுதி வந்தடையும் என்று பொது சுகாதார அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த மாத இறுதிக்குள் (Pfizer vaccine) என்ற கோவிட்-19 தடுப்பூசியின் முதல் தொகுதி கத்தார் வந்தடையும் என்று அமைச்சகம் எதிர்பார்க்கிறது என விளையாட்டு மற்றும் அவசர விவகாரங்களுக்கான பொது சுகாதார அமைச்சரின் ஆலோசகர் Dr Abdul-Wahab Al-Musleh கூறியுள்ளார்.

கத்தார் நாட்டிற்கு வந்தடைந்தார் பாலஸ்தீன அதிபர்; அமீருடன் இன்று சந்திப்பு.!

Alkass சேனல் நிகழ்ச்சியில் நேற்று (13-12-2020) கலந்துகொண்ட அவர், முதியவர்கள், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் மற்றும் முன்னணி தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், அடுத்த மாதங்களில் படிப்படியாக தடுப்பூசி மற்ற பொதுமக்களுக்கு சென்றடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

Pfizer தடுப்பூசியானது இரண்டு அளவுகளைக் கொண்டுள்ளது, இவை மூன்று வார இடைவெளியில் வழங்கப்பட வேண்டும் என்று Dr Abdul-Wahab Al-Musleh கூறியுள்ளார்.

மேலும், உலகின் பிற பகுதிகளைப் போல கத்தாரிலும் தடுப்பூசி கட்டாயமில்லை, சில காலாண்டுகள் கட்டாயமாக நீங்கள் பயணம் செய்ய அல்லது அரங்கங்களுக்குள் (Stadium) நுழைய தடுப்பூசி போட வேண்டியிருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கத்தார் தேசிய தினம்: புதிய கத்தார் ரியால் நோட்டுகளை வெளியிட்டது மத்திய வங்கி.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…