கத்தாரில் COVID-19 தடுப்பூசியை பெற ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்.!

Qatar launches online registration
Pic: MoPH Website

கத்தாரில் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் COVID-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள புதிய வலைத்தள பதிவு செயல்முறையை (New website registration) தொடங்குவதாக பொது சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

புதிய ஆன்லைன் பதிவு வடிவம் ஜனவரி 17, 2021 முதல் தொடங்கும் என கத்தார் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கத்தாரில் COVID-19 தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் போட்டுக்கொண்ட மூத்த அதிகாரிகள்.!

தற்போது பட்டியலிடப்பட்டுள்ள முன்னுரிமை வகைகளில் இல்லாதவர்கள் தடுப்பூசி பெறுவதற்கான விருப்பத்தை பதிவு செய்யலாம் என்றும், அவர்களின் விவரங்கள் MOPHஆல் சேமிக்கப்பட்டு பின்னர், தடுப்பூசிக்கு தகுதி பெற்றவுடன் அவர்களுக்கு அறிவிப்பு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

COVID-19 தடுப்பூசியை பெறுவதற்கு  கீழ்கண்ட இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்:

  • குறிப்பு: உங்கள் தேசிய அங்கீகார அமைப்பு (NAS) TAWTHEEQ Username மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி நீங்கள் உள்நுழைய வேண்டும்.
  • உங்களிடம் தேசிய அங்கீகார அமைப்பு (NAS) கணக்கு இல்லையென்றால், இந்த www.nas.gov.qa லிங்க் சென்று புதிய கணக்கை உருவாக்கலாம்.

கத்தாரில் தற்போது COVID-19 தடுப்பூசிகள் 27 சுகாதார மையங்களில் போடப்பட்டு வருகிறது, பொது சுகாதார அமைச்சகம் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் கடுமையான நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தியுள்ளது.

கத்தாரில் Pfizer-BioNTech COVID-19 தடுப்பூசி அனைத்து கத்தார் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாடர்னா COVID-19 தடுப்பூசி எதிர்வரும் வாரங்களில் கத்தார் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கத்தாரில் நிலவும் பனிமூட்டம்: வாகன ஓட்டிகளுக்கு QMD அறிவுறுத்தல்.!