கத்தாரில் கடந்த மாதத்தில் சுமார் 1,161 டன் உள்ளூரில் விளைந்த காய்கறிகள் விற்பனை.!

Locally produced vegetables
Pic: MME

கத்தாரில் கடந்த அக்டோபர் மாதத்தில் பிரீமியம் தயாரிப்புகள் மற்றும் கத்தார் பண்ணைகள் திட்டம் ஆகியவற்றின் மூலமாக உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட 1,161 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்படுள்ளது.

கத்தார் பண்ணைகள் திட்டம் மூலம் 810 டன்கள் மற்றும் பிரீமியம் தயாரிப்புகள் மூலம் 351 டன்கள் உள்ளூரில் விளைந்த காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MME) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 3 பேர் கைது‌.!

உள்ளூர் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் திட்டத்தை வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் கண்காணிக்கின்றது.

மேலும், இத்திட்டங்கள் கத்தார் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் மற்றும் முதலீடு செய்ய ஊக்குவிப்பதற்கும் பங்களிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் இந்த வாரம் ஈரப்பதமான வானிலை நிலவும்; வானிலை ஆய்வுத்துறை.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…