கத்தார் தேசிய விளையாட்டு தினத்தில் பொது மக்களுக்கு அனுமதியில்லை.!

Qatar National Sports Day

கத்தாரில் 2021ம் ஆண்டு தேசிய விளையாட்டு தினத்தின் நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்கான நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை தேசிய சுகாதார தினக்குழு கடந்த செவ்வாயன்று பொது சுகாதார அமைச்சகத்துடன் ஒருங்கிணைத்து அறிவித்தது.

கத்தாரில் COVID-19 தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்காகவும், சமூகப் பாதுகாப்பின் நலனுக்காகவும் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் குறித்து பிப்ரவரி 3ம் தேதி வெளியிடப்பட்ட அமைச்சர்கள் குழுவின் முடிவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு அனைத்து விளையாட்டு நடவடிக்கைகளும் ஓட்டம், நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்டவை தனிப்பட்டதாக மட்டுமே இருக்கும் என முடிவு செய்யப்பட்டது என்று குழு வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கத்தாரில் கொரோனாவால் புதிய சிக்கல் ஏற்பட வாய்ப்பு: MoPH அதிகாரி எச்சரிக்கை.!

பந்து போட்டிகள் போன்ற உடல் தொடர்புடைய விளையாட்டுக்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும், பல அணிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் போட்டியிடும் விளையாட்டுகளுக்கு அனுமதி இல்லை என்றும், விளையாட்டு தினத்தில் விளையாட்டு நடவடிக்கைகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்கள் வருகை அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விளையாட்டு நடவடிக்கைகளும் வெளிப்புற இடங்களில் நடைபெற வேண்டும், அதே நேரத்தில் உட்புற விளையாட்டு தடைசெய்யப்பட்டுள்ளது என்றும், கூடுதலாக பள்ளிகள் மற்றும் கிளப்புகளில் விளையாட்டு நிகழ்வுகளை நடத்த அனுமதிக்கக்கூடாது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா உட்பட 20 நாடுகளுக்கு விமான முன்பதிவை நிறுத்தியது கத்தார் ஏர்வேஸ்.!