சூடான் நாட்டிற்கு மருத்துவ உதவிகளை வழங்கிய கத்தார்.!

Qatar provides medical aid
Pic: QNA

சூடான் நாட்டின் மருத்துவத் துறைக்கு ஆதரவாக கத்தார் அரசு மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளது. மருத்துவ உதவிகளுடன் அனுப்பப்பட விமானம் சூடான் தலைநகர் Khartoum விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.

இந்த மருத்துவ உதவிகளை சூடான் சுகாதார அமைச்சகத்தின் இருதரப்பு உறவுகள் இயக்குநர் Dr. Eman Mukhtar, சூடான் நாட்டின் கத்தார் தூதர் H E Abdulrahman bin Ali Al Kubaisi மற்றும் சூடானில் உள்ள கத்தார் கொண்டு நிறுவனத்தின் அலுவலக இயக்குநர் Engineer Omar Abdul Aziz ஆகியோர் விமான நிலையத்தில் பெற்றுக்கொண்டனர்.

மத்திய கிழக்கில் வெளிநாட்டினர்கள் அதிகம் வேலை செய்யும் நாடுகளில் கத்தார் முதலிடம்.!

சுகாதார களத்தில் கத்தார் அரசு தனது நாட்டிற்கு அளித்த ஆதரவுக்கு சூடான் சுகாதார அமைச்சகத்தின் இருதரப்பு உறவுகள் இயக்குநர் Dr. Eman Mukhtar பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

மேலும், சூடான்-கத்தார் உறவுகள் வலுவான மற்றும் உறுதியானவை என்றும், கத்தார் அரசாங்கத்திற்கும் மற்றும் கத்தார் மக்களுக்கும் நன்றிகளைத் அவர் கூறினார்.

கத்தாரில் அதிகரிக்கும் கொரோனா: பணியிடங்களில் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் வெளியீடு.!