வெளிநாட்டு தொழிலாளர்களின் தாகத்தை தணிக்கும் கத்தார் தன்னார்வ அமைப்பு.! 

Qatar Red Crescent Society
Pic: QRCS

கத்தார் ரெட் கிரசண்ட் சொசைட்டி (QRCS) பொதுப்பணி ஆணையத்தின் (Ashgal) ஒத்துழைப்புடன் தன்னார்வலர்களால் செயல்படுத்தப்பட்ட ஒரு தொண்டு முயற்சியை செயல்படுத்தியுள்ளது.

இந்த தொண்டு முயற்சி கத்தார் ரெட் கிரசண்ட் சொசைட்டியின் தன்னார்வலர்கள் பிரிவு ஆண்டு முழுவதும் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் நலனுக்காக, குறிப்பாக வெளிநாட்டு தொழிலாளர்களின் நலனுக்காக செயல்படுத்துகிறது.

கத்தாரில் கட்டாரா பாரம்பரிய தோவ் (கப்பல்) விழா நிறைவடைந்தது.!

கட்டுமானத் தொழிலாளர்களின் பணி இடங்களில் 15,000க்கும் மேற்பட்ட குளிர்ந்த நீர் மற்றும் ஜூஸ் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டதாக கத்தார் ரெட் கிரசண்ட் சொசைட்டியின் (QRCS) தன்னார்வலர்கள் மற்றும் உள்ளூர் மேம்பாட்டு பிரிவின் நிர்வாக இயக்குநர் Muna Fadel Al Sulaiti தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னார்வலர்கள் மற்றும் பயனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் கடைப்பிடிக்கப்பட்டது.

இந்த முயற்சி Leabaib, Duhail, Al Kheesa, Industrial Area, Umm Ebairiya, Corniche, Al-Waab, Pearl-qatar மற்றும் Al-Wukair போன்ற பல இடங்களில் செயல்படுத்தப்பட்டது.

கத்தாரில் சுமார் 1 மில்லியன் மரங்கள் நடும் பிரச்சாரம்.!

இந்த முயற்சியை தொழிலாளர்கள் பாராட்டியுள்ளதாக QRCS-இன் சமூக மேம்பாட்டுத் தலைவர் மூசா முகமது அல் குவாரி தெரிவித்துள்ளார்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…