அமீரகத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்கு விமான சேவைகளை தொடங்கியது கத்தார் ஏர்வேஸ்.!

Qatar resume UAE flights
Pic: Qatar Airways

கத்தார் ஏர்வேஸ் வருகின்ற வாரத்தில் துபாய் மற்றும் அபுதாபிக்கு நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி 27, 28 ஆகிய தேதிகளில் துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அபுதாபி சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றிற்கு கத்தார் ஏர்வேஸ் விமான சேவைகளை தெடங்க உள்ளது. இதற்கான முன்பதிவு விமானத்தின் இணையதளத்தில் திறக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் இன்று இரவு முதல் பலத்த காற்று வீசக்கூடும்; வானிலை ஆய்வுத்துறை.!

கத்தார் ஏர்வேஸ் வருகின்ற ஜனவரி 27 முதல் துபாய்க்கு தனது சேவையை மீண்டும் தொடங்கிறது, கத்தார் ஏர்வேஸ் QR 1018 விமானம் தோஹாவின் ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இரவு 7 மணிக்கு (கத்தார் நேரம்) புறப்பட்டு இரவு 9:10 மணிக்கு (அமீரக நேரம்) துபாய் சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என்றும், இடைவிடாத இந்த பயணம் ஒரு மணி நேரம் பத்து நிமிடங்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கத்தார் ஏர்வேஸ் ஜனவரி 28 முதல் அபுதாபிக்கு தனது சேவையை மீண்டும் தொடங்கிறது, கத்தார் ஏர்வேஸ் QR 1054 விமானம் இரவு 7:50 மணிக்கு (கத்தார் நேரம்) ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு இரவு 9:55 மணிக்கு (அமீரக நேரம்) வந்தடையும் என்றும், இடைவிடாத இந்த பயணம் ஒரு மணி நேரம் ஐந்து நிமிடங்கள் பயணம் நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் நீண்டகாலம் வசித்து வந்த இந்தியர் மரணம்.!