பிரான்ஸ் தேவாலய தாக்குதல்: கத்தார் அரசு கடும் கண்டனம்.!

Qatar condemns Jeddah attack

பிரான்ஸின் நைஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கத்தியால் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கத்தார் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், வன்முறைகள் மற்றும் பயங்கரவாதத்தை ஒருபோதும் கத்தார் அரசு ஏற்றுக்கொள்ளாது என்றும், அதுவே தங்களது நிலைபாடு என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் உப்பு பாக்கெட்டுகளுக்குள்‌ மறைத்து புகையிலை பொருட்கள் கடத்த முயற்சி..!

மேலும், வழிபாட்டு தலங்களை குறிவைத்து நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் எனவும்
கூறியுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பிரான்ஸ் அரசாங்காத்திற்க்கும், பொது மக்களுக்கும் கத்தார் நாட்டின் ஆழ்ந்த இரங்கலை அமைச்சகம் வெளிப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இஸ்லாத்திற்கு எதிரான விரோதப்போக்கு பொருளாதார உறவுகளில் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்; Qatar chamber எச்சரிக்கை.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…