கத்தார் வருபவர்களுக்கான தனிமைப்படுத்தும் காலம் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு.!

Quarantine requirements for all arrivals in Qatar extended to December 31
Pic: The Peninsula Qatar

கத்தார் நாட்டவர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் விசா வைத்திருப்பவர்கள் உட்பட அனைத்து வருகையாளர்களுக்கும் கட்டாய தனிமைப்படுத்ததுதல் டிசம்பர் 31, 2020 வரை நீட்டிக்கப்படுவதாக டிஸ்கவர் கத்தார் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

கத்தார் நாட்டவர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நிரந்தர வதிவிட அட்டை உள்ளவர்கள் அல்லது விதிவிலக்காக அங்கீகரிக்கப்பட்ட விசா வைத்திருப்பவர்களுக்கு கத்தார் வருவதற்கு அனுமதி வழங்கப்படும் என்பதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 3 பேர் கைது‌.!

QID வதிவிட அனுமதி வைத்திருப்பவர்கள் Qatar Portal மூலம் பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அதில் வீடு அல்லது ஹோட்டல் தனிமைப்படுத்தல் குறித்து குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

QID வைத்திருப்பவர்கள் மற்றும் தனிப்பட்ட விசா வருகை வைத்திருப்பவர்கள் ஒப்புதல் பெறுவதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன:

  • ஒப்புதல் அளிக்கப்பட்டதும் உங்கள் சான்றிதழில் உள்ள தனிமைப்படுத்தபட்ட வகையை சரிபார்க்கவும்.
  • உங்களின் உறுதிப்படுத்தபட்ட விமான சேவையை சரிபார்க்க வேண்டும்.
  • உங்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட தங்கும் விடுதியை சரிபார்க்க வேண்டும்.
  • நுழைவு அனுமதி மற்றும் கத்தார் டிஸ்கவர் Vovcher நகல்கள் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிபடுத்த வேண்டும், விமானத்தில் பயணம் செய்யும்போது விமான ஆவணங்கள் வைத்திருப்பதை சரிபார்த்து கொள்ளவும்.
  • இந்த ஆவணங்கள் முறையாக இல்லாவிட்டால் உங்களுக்கான விமானத்தில் பயணம் செய்ய முடியாது.

இதையும் படிங்க: கத்தாரில் உள்ள இந்தியர்களுக்கான காப்பீடு திட்டம் குறித்து சிறப்பு முகாம்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…