கத்தாரில் தொழிலாளர்கள் வேலை மாற்ற புதிய நடைமுறை.!

Resignation copy required
Assistant Undersecretary for Labour Affairs, Mohammed Hassan Al Obaidli

கத்தாரில் தொழிலாளர் ஒருவர் வேறொரு வேலைக்கு மாற விரும்பினால் தன் ராஜினாமா நகலை வேலை மாற்றத்திற்கான விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என்றும், இடமாற்றம் செய்ய விரும்பும் இடத்தில் புதிய நிறுவனத்தின் கையொப்பமும் முத்திரையும் தேவை என்றும் நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சகத்தின் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி துணை செயலாளர் Mohammed Hassan Al Obaidli தெரிவித்துள்ளார்.

அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட வேலை மாற்ற விண்ணப்பம் ஏற்றுக்கொள்ள அல்லது நிராகரிக்க மதிப்பீடு செய்யப்படும் என அவர் கூறினார்.

கத்தாரின் பல்வேறு பகுதிகளில் மாதந்தோறும் தூதரக முகாம்கள் நடைபெறும் – இந்திய தூதர்.!

தொழிலாளரின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், தொழிலாளரின் இடமாற்றம் மற்றும் அறிவிப்பு காலம் குறித்து முதலாளிக்கு குறுஞ்செய்தி (Text Message) அனுப்பப்படும்.

மேலும், முதல் குறுஞ்செய்தி அனுப்பபட்டது இறுதி ஒப்புதல் அல்ல விண்ணப்ப கோரிக்கை மதிப்பீட்டின் கீழ் உள்ளது என்றும், மதிப்பீட்டின் இறுதி வரை தொழிலாளர் நிறுவனத்தில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாளி மற்றும் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின்படி, தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் புதிய முதலாளியிடமிருந்து ஓட்டுநர் உரிமம் பெறுவது போன்ற கட்டண செலவிற்கு உரிமை கோர முதலாளிக்கு உரிமை உண்டு.

கத்தார் வரும் பயணிகளுக்கு மறு நுழைவு எளிதாகிறது; தானியங்கி மூலம் அனுமதி.!

தொழிலாளர் வேலை ஒப்பந்தம் அல்லது தொழிலாளர் சட்ட விதிகளை மீறி நாட்டை விட்டு வெளியேறினால், ஒரு வருடத்திற்கு கத்தார் திரும்ப முடியாது என்று Mohammed Hassan Al Obaidli கூறியுள்ளார்.

 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…