சவுதியில் சர்வதேச விமானப் போக்குவரத்து ஒருவாரம் ரத்து – காரணம் என்ன.?

Saudi suspends international flights
Pic: Shutterstock

பிரிட்டனில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து, சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு ஒருவார காலம் தடை விதித்து சவுதி அரேபியா மற்றும் துருக்கி நாடுகள் அறிவித்துள்ளன.

பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில் கொரோனா வைரஸில் புதிய வகை வேகமாகப் பரவிவருவதை அடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளது.

குவைத் வளர்ச்சிக்காக பாடுபட்ட ஷேக் நாசர் காலமானார் – கத்தார் அமீர் உள்ளிட்டோர் இரங்கல்.!

இந்நிலையில், சவுதி அரேபியா மற்றும் துருக்கி நாடுகள் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு அடுத்த ஒருவார காலம் தடைவிதித்துள்ளன.

இதுமட்டுமல்லாமல், ஐரோப்பிய நாடுகளி்லிருந்து சவுதி அரேபியாவுக்கு சமீபத்தில் வந்தவர்கள், புதிய கொரோனா வைரஸ் பரவிய நாடுகளில் இருந்து வந்த மக்கள் அனைவரும் கண்டிப்பாக இரு வாரங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சவுதி அரேபியா அரசு அறிவுறுத்தியுள்ளது.

கத்தார் 2022 உலகக் கோப்பை ஏற்பாடுகள் தீவிரம்; FIFA தலைவர் பாராட்டு.!