கத்தாரில் COVID-19 தடுப்பூசியின் இரண்டாம் தொகுதியை பெற நடவடிக்கை.!

Second shipment COVID-19 vaccine
Pic : Moph

கத்தாரில் COVID-19 தடுப்பூசியின் இரண்டாம் தொகுதியை (shipment) விரைவில் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் (MoPH) தெரிவித்துள்ளது.

கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 4 பேர் கைது‌.!

தடுப்பூசி பெற தகுதியுள்ளவர்கள் தொலைபேசி அல்லது SMS மூலம் நேரடியாக தொடர்பு கொள்ளப்படுவார்கள் என்றும், சமூகத்தின் மற்ற உறுப்பினர்கள் தங்களை அழைக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் அமைச்சகம் அறிவித்துள்ளது.

தடுப்பூசி பிரச்சாரத்தின் முதல் கட்டமாக, 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், நாள்பட்ட பராமரிப்பு மற்றும் வீட்டு பராமரிப்பு வசதிகளில் உள்ள பெரியவர்கள், தொற்றுநோயால் பாதிக்கப்படும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கடுமையான நாள்பட்ட நோயால் பாதிக்கப்படும் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

கத்தாரில் இந்த உத்தரவை மீறினால் QR 1,000 அபராதம்.!

கத்தார் நாட்டிற்கு COVID-19 தடுப்பூசியின் இரண்டாம் தொகுதியை கொண்டுவர உறுதி செய்வதற்காக பொது சுகாதார அமைச்சகம் மருந்து நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது என அமைச்சகம் தனது சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளது.

மேலும், ஹமாத் பொது மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் Dr.Yousef Al Maslamani தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கத்தாரில் COVID -19 தடுப்பூசி பிரச்சாரம் எந்த விதமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தவில்லை என்றும், Pfizer-BioNTech தடுப்பூசியின் முதல் டோஸ் கொடுக்கப்பட்ட 21 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் கொடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

த்தார் செய்திகளைஉடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…