கத்தார் நாட்டிற்குள் கடத்த முயன்ற 1,400 தடைசெய்யப்பட்ட மாத்திரைகள் பறிமுதல்.!

smuggle banned pills
Pic: Qatar Customs

கத்தார் நாட்டிற்குள் தடைசெய்யப்பட்ட மாத்திரைகளை கடத்தும் முயற்சியை ஏர் கார்கோ மற்றும் தனியார் விமான நிலைய சுங்க ஆய்வாளர்கள் முறியடித்தனர்.

தனிப்பட்ட பார்சல் ஒன்றில், மறைத்து வைத்து கத்தார் நாட்டிற்குள் கடத்த முயன்ற 1,400 Zopiclone மாத்திரைகள் அடங்கிய 25 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கத்தார் சுங்கம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

COVID-19: கத்தாரில் இன்று (நவ.19) புதிதாக 208 பேர் பாதிப்பு.!

சட்டவிரோதமான பொருட்களை நாட்டிற்கு கொண்டு செல்வதற்கு எதிராக அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், சுங்க அதிகாரிகள் சமீபத்திய சாதனங்களைக் கொண்டு செயல்படுகிறார் என்றும், கடத்தல்களை சமாளிக்க அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா விதிமீறல்: கத்தாரில் இந்த வாரத்தில் 1000 பேருக்கு மேல் நடவடிக்கை.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…