கத்தார் நாட்டிற்குள் தடைசெய்யப்பட்ட மாத்திரைகள் கடத்த முயற்சி.!

Smuggling banned pills
Pic: Qatar Customs

கத்தார் நாட்டிற்குள் தடைசெய்யப்பட்ட Lyrica மாத்திரைகளை கடத்தும் முயற்சியை Cargo மற்றும் தனியார் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் முறியடித்தனர்.

இதுகுறித்து கத்தார் சுங்கம் அதிகாரப்பூர்வ ட்விட்டரில், கத்தார் நாட்டிற்குள் கடத்த முயன்ற 1,395 Lyrica மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கத்தாரில் உள்ள இந்த மாலில் மிட்நைட் ஷாப்பிங் விழா.!

சுங்க அதிகாரி எக்ஸ்பிரஸ் மெயிலில் உள்ள ஒரு பார்சலில் சந்தேகம் அடைந்ததை அடுத்து, எம்பிராய்டரி மற்றும் தையலுக்காகப் பயன்படுத்தப்படும் ரிப்பன்களால் மூடப்பட்ட பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,395 மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமான பொருட்களை நாட்டிற்கு கொண்டு செல்வதற்கு எதிராக அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், சுங்க அதிகாரிகள் சமீபத்திய சாதனங்களைக் கொண்டு செயல்படுகிறார் என்றும், கடத்தல்களை சமாளிக்க அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் உயர்நிலைப் பள்ளிகளை பார்வையிட்ட கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…