கத்தாரில் உள்ள பிரபல ஷாப்பிங் மால் தற்காலிகமாக மூடல்.!

Safari Mall resumes operations
Pic: Safari Mall

கத்தாரில் அதிகரித்து வரும் COVID-19 சம்பவங்கள் மத்தியில், கூட்டம் அதிகமாக இருக்கும் காரணத்தால் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் Abu Hamour பகுதியில் உள்ள சஃபாரி மாலை தற்காலிகமாக மூடியுள்ளது.

கத்தாரில் இன்று ஒரே நாளில் 811 பேர் மீது அதிரடி நடவடிக்கை.!

Abu Hamour கிளையின் சஃபாரி மாலின் சேவையை தற்காலிகமாக நிறுத்துமாறு அமைச்சக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர் என்றும், மேலும் மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்காக மால் மூடப்பட்டிருக்கும் என்றும் Safari மால் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் மற்ற சஃபாரி விற்பனை நிலையங்களில் ஷாப்பிங் செய்யலாம் என்றும், எந்தவித கவலையும் இல்லாமல், அனைத்து பாதுகாப்பு மற்றும் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக பராமரிக்கப்பட்டு பின்பற்றப்படுகின்றன என்றும் Safari மால் அதன் முகநூலில் குறிப்பிட்டுள்ளது.

குவைத் அமீருக்கு எழுத்துப்பூர்வ செய்தியை அனுப்பினார் கத்தார் அமீர்.!